அரிசிமாவு ரொட்டி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு - 3 கப்

தேங்காய் -1/2 முடி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் சட்டியை வைத்து மாவை போட்டு மிதமான சூட்டில் வறுக்கவும்(மாவு சிவக்க கூடாது)

தேங்காயை துருவிக் கொள்ளவும். மாவுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்க்கவும்.

அந்த கலவையில் தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ளவும்(கொஞ்சம் இளக்கமாக)

பின் மாவை சப்பாத்தி உருண்டையை விட கொஞ்சம் பெரிதாக எடுத்து துணியை நனைத்து அதில் வைத்து தட்டவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து ரொட்டியை போட்டு எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் இருபக்கமும் திருப்பிப்போட்டு சுடவும்.

குறிப்புகள்:

இதனுடன் மீன் குழம்பு கறி குழம்பு வைத்து சாப்பிடலாம்.