அரிசிப்பொரி உப்புமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசிப் பொரி - 1 லிட்டர்

சின்ன வெங்காயம் - 1 கப்

பச்சை மிளகாய் - 3

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை - சிறிது

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எலுமிச்சம்பழம் - 1

வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 1/4 கப்

தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

அரிசிப்பொரியைத் தண்ணீரில் கொட்டி அலசி வடிதட்டில் போடவும்.

வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும்.

எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வடிகட்டிய பொரியை அதனுடன் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

எல்லாம் சேர வந்து வெந்ததும் இறக்கி வைத்து எலுமிச்சம்பழம் பிழிந்து கொத்தமல்லித்தழையைத்தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: