அடை (1)
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
கொண்டைக்கடலை - 1/2 கப்
வற்றல் மிளகாய் - 7
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொண்டைக்கடலையை 10 மணிநேரம் ஊற வைக்கவும். அரிசி, துவரம்பருப்பு, கொண்டைக்கடலை, மிளகாயை நறநறவென்று அரைக்கவும்.
அதனுடன் உப்பு, பெருங்காயம், தேங்காய் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
தோசைக்கல் காய்ந்ததும் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, தோசைபோல வட்டமாக அடை வார்க்கவும்.
அதன் நடுவே தோசைக்கரண்டியால் சிறிது துளையிட்டு நடுவிலும் ஓரங்களிலும் சிறிது எண்ணெய் ஊற்றி இரண்டுபுறமும் திருப்பிவிட்டு வெந்ததும் பரிமாறவும்.