அடை உப்புமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அடை உப்புமா மாவு - 1/4 கிலோ

சின்ன வெங்காயம் - 50 கிராம்

பச்சை மிளகாய் - 3

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி

நெய் - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பெருங்காயத்தூள் போடவும்.

ஒரு நிமிடம் கழித்து வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கி கறிவேப்பிலை சேர்க்கவும்.

நன்கு வதங்கியதும் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொத்தித்ததும் உப்பு சேர்த்து மாவை தூவினாற் போல் போட்டு கட்டி தட்டாமல் கிண்டவும்.

குக்கரை மூடி இரண்டு விசில் சத்தம் வரை வேக வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து குக்கரை திறந்து தேங்காய் துருவல் போட்டு இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: