ஃப்ரெஞ்ச் உப்புமா
தேவையான பொருட்கள்:
உடைத்த பச்சரிசி - 200 கிராம்
பூண்டு - 12 பல்
தேங்காய் துருவல் - 1 கப்
புதினா - 5 கொத்து
பட்டை - 3 துண்டு
பெரிய வெங்காயம் - 1
நெய் - 1/2 மேசைக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். புதினா இலைகளை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பூண்டை தோலுரித்து முழு பூண்டாக எடுத்துக்கொள்ளவும்.
தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து பிழிந்து 3 கப் அளவு பால் எடுத்துக் கொள்ளவும். தேங்காயை அரைத்து எடுத்த பாலுடன் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
வெறும் வாணலியில் உடைத்த அரிசியை போட்டு நிறம் மாறாமல் இரண்டு நிமிடம் வறுத்து எடுக்கவும்.
அதே பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை போட்டு தாளித்து பின்னர் புதினா, வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும் அதனுடன் பூண்டை போட்டு வதக்கவும்.
அதனுடன் 3 கப் தேங்காய் பால் ஊற்றவும். பின்னர் உப்பு போட்டு கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் வறுத்த அரிசியை போட்டு கிளறி விட்டு மூடி வைக்கவும்.
20 நிமிடம் வேக விடவும். இடையில் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும், இல்லையென்றால் அடிப்பிடித்து விடும்.
வெந்ததும் இறக்கி வைத்து நெய் சேர்த்து பரிமாறவும்.