வெங்காய சாம்பார்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் (பெரியது) - 3

மிளகு - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

கருவேப்பிலை - சிறிது

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

பொட்டுக்கடலை மாவு - 5 மேசைக்கரண்டி

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மிளகு மற்றும் சோம்பை லேசாக வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாக (கொரகொரப்பாக) பொடித்து கொள்ளவும். வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு போட்டு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், மிளகு சோம்பு பொடி, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், உப்பு, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

5 நிமிடம் வதங்கியதும், நீர் சேர்த்து ஒரு விசில் விடவும்.

பிறகு ஆவி அடங்கியதும், பொட்டுகடலை மாவை நீரில் கரைத்து ஊற்றி இரண்டு கொதி வந்ததும் (பச்சை வாசனை அடங்கியதும்) இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: