சோம்பு சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சோம்பு - 1/2 கைப்பிடியளவு

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2

பொட்டுக்கடலை - 50 கிராம்

பச்சை மிளகாய் - 3

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தாளிப்பதற்கு

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து அதில் கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் தக்காளி சேர்க்கவும்.

சோம்பு மற்றும் பொட்டுக்கடலையை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.

தக்காளி வதங்கியவுடன் மஞ்சள் தூள் சேர்க்கவும். அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

மிக்ஸியில் அரைத்த கலவையை அதில் ஊற்றி உப்பு சேர்த்து, விடாமல் கிளறவும்.

கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: