ஸ்வீட் சீரகச் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புளி - 2 எலுமிச்சை அளவு (கரைத்து வடிகட்டியது)

வறுத்த சீரகம் - 25 கிராம்

சர்க்கரை - 2 மேசைக்கரண்டி

மிள்காய்தூள் - 1 மேசைக்கரண்டி

கரம்மசாலா - 3 சிட்டிகை

நல்லெண்ணைய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வறுத்த சீரகத்தையும் சர்க்கரையயும் சேர்த்து அரைக்கவும்.

அரைத்தவற்றை புளித்தண்ணீரில் கரைக்கவும்.

மேலும் மிளகாய்தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.

கொதித்து கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும்.

வாணலியில் நல்லெண்ணையை ஊற்றி காயவைத்து இத்துடன் சேர்த்து கிளறிவிடவும்.

குறிப்புகள்: