ஸ்பெஷல் தேங்காய் சட்னி
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - பாதி தேங்காய்
பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு - 5
பச்சை மிள்காய் - 3
இஞ்சி துருவல் - 1/2 தேக்கரண்டி
மல்லி இலை - சிறிது
புளி - சிறிது
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உ.பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
பெருங்காய்ப்பொடி - பின்ச்
நறுக்கிய சின்ன வெங்காயம் - 4 (விரும்பினால்)
கருவேப்பிலை - 2 இணுக்கு
செய்முறை:
துருவிய தேங்காய்,நறுக்கிய பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, முந்திரி பருப்பு, இஞ்சி துருவல், மல்லி இலை, புளி, உப்பு, தண்ணீர் தேவைக்கு சேர்த்து நல்ல பக்குவமாக அரைத்து எடுக்கவும்.
அரைத்ததை ஒரு பவுலில் எடுத்து வைக்கவும். கெட்டித்தனமை அவரவர் விருப்பம்.
தாளிக்க எண்ணெய் விட்டு காயவும், கடுகு, உ.பருப்பு, சீரகம், கிள்ளிய வற்றல்,பெருங்காயப்பொடி,க்ருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து வைத்த சட்னியில் கொட்டி கலந்து பரிமாறவும்.விரும்பினால் நறுக்கிய சின்ன வெங்காயம் சிறிதும் தாளிக்கும் பொழுது சேர்க்கலாம்.
சுவையான ஸ்பெஷல் தேங்காய் சட்னி ரெடி.