வேர்க்கடலை தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 1 கப்
தக்காளி - 1 பெரியது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
சீரகம் - 1/2 தேக்கரண்டி
புளி - சிறிய கொட்டை அளவு
பூண்டு - 2 பல்
உப்பு - தேவையான அளவு
கடைசியில் தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5 இலை
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் வேர்க்கடலினை வறுத்து தோல் எடுத்து கடலையினை தனியாக கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய் மற்றும் சீரகம் போட்டு வதக்கவும்.
தக்காளியினை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
பிறகு வெட்டி வைத்துள்ள தக்காளியினை இதில் போட்டு வதக்கவும்.
இதனை சிறிது நிமிடம் ஆறவிடவும்.
இப்பொழுது வதக்கிய பொருட்களுடன் வேர்க்கடலை, பூண்டு, புளி மற்றும் உப்புடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
இப்பொழுது சுவையான வேர்க்கடலை தக்காளி சட்னி ரெடி.
குறிப்புகள்:
இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.