வெங்காய வற்றல் சட்னி

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வெங்காய வற்றல் (சின்ன வெங்காயத்தை இரண்டாக அரிந்து வெய்யிலில் நன்கு காய வைத்தது) - 2 மேசைக்கரண்டி

பொடியாக அரிந்த தக்காளி - 2 கப்

புளி - அரை நெல்லி அளவு

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி இலை - 2 மேசைக்கரண்டி

காயப்பொடி - 1/4 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 5

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எண்னெயை வாணலியில் ஊற்றி சூடானதும் முதலில் பருப்புகள், மிளகாய் இவற்றை பொன்னிறமாக வறுத்தெடுத்துக்கொள்லவும்.

பின் அதே எண்ணெயில் வெங்காயத்தைப்போட்டு இலேசாக சிவப்பாகப் பொரிந்ததும் எடுத்து வைக்கவும்.

பின் அதே எண்ணெயில் தக்காளி, கொத்தமல்லி, காயம் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.

அனைத்தையும் புளியுடன் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

குறிப்புகள்: