வெங்காய தக்காளி தொக்கு
1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1
தக்காளி (மிக்ஸியில் அடித்தது) - 2
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு
சீரகம்
உளுத்தம்பருப்பு
கடலைப்பருப்பு
கறிவேப்பிலை
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து, கறிவேப்பிலை சேர்க்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி பச்சை வாசம் போய் குழைய ஆரம்பித்ததும், மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.