வெங்காய சட்னி (4)
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - பாதி
காய்ந்த மிளகாய் - 4
சீரகம் - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பூண்டு இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் இரு எண்ணெயும் ஊற்றி சூடு வந்ததும், உளுத்தம்பருப்பு மற்றும் சீரகம் போட்டு பொரிந்ததும், காய்ந்தமிளகாயை சேர்க்கவும்.
நறுக்கின வெங்காயம், பூண்டும் போட்டு ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும்.
பின்பு தக்காளியை சேர்த்து மிதமான தனலில் நன்கு வதக்க வேண்டும்.
நன்கு வெங்காயம் எல்லாம் சிவக்க வதங்கியதும், அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுத்து உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
ஒரு ஸ்பூன் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து இதில் சேர்க்கவும்.
குறிப்புகள்:
இது தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்.