வெங்காய சட்னி (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1

தக்காளி - 1

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

தேங்காய் - 1 மேசைக்கரண்டி

நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

பெருங்காய தூள் - ஒரு பின்ச்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

செய்முறை:

வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

கடைசியில் மிளகாய் தூள், பெருங்காய தூள் சேர்த்து கிளறி இறக்கவும்

ஆறிய பின் வதக்கிய பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும். அரைத்த சட்னியை வேறு பாத்திரத்திற்கு மாற்றி உப்பு சேர்த்து கலக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ஊற்றவும்.

வெங்காய சட்னி ரெடி.

குறிப்புகள்: