வெங்காய சட்னி

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 3

பூண்டு - 6 அல்லது 8

மிளகாய் வற்றல் - 4

புளி - நெல்லிக்காய் அளவு

கடுகு, உளுந்து, எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.

நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல், புளி, உப்பு சேர்த்து வதக்கி அரைக்கவும்.

அரைத்த விழுதில் கடுகு, உளுந்து தாளித்து இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: