வெங்காயம் தக்காளி சட்னி

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 4

தக்காளி - 3

மிளகாய் தூள் - தேவையான அளவு

மஞ்சள் தூள் - சிறிது

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - சிறிது

உளுந்து - சிறிது

பெருங்காயம் - சிறிது

எண்ணெய் - தாளிக்க

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கொதிக்கும் நீரில் தக்காளியை போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும்.

தக்காளியை தோல் உரித்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரிந்தவுடன் உளுந்து போட்டு வறுக்கவும், பிறகு சிறிது பெருங்காயம் போடவும்.

பிறகு பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்.

அதனுடன் தக்காளி கரைசலை ஊற்றி மிளகாய் தூள், மஞ்சள் தூள், மீதி உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.

பொடியாக நறுக்கின கொத்தமல்லி சேர்த்தால் சுவையான சட்னி தயார்.

குறிப்புகள்: