முப்பருப்பு சட்னி
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
பாசிப்பருப்பு - 2 தேக்கரண்டி
வரமிளகாய் - தேவைக்கேற்ப
தேங்காய் - 1/2 கப்
கடுகு - சிறிது
உளுத்தம் பருப்பு - சிறிது (தாளிக்க)
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாய் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
அதில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு தேங்காய் சேர்த்து அடுப்பை நிறுத்தி விடவும்.
ஆறிய பின் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்.