மிளகாய் கறி

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சைமிளகாய் - 15 (50 கிராம்)

கெட்டியான தேங்காய்ப்பால் - 1/2 கப்

சின்ன வெங்காயம் - 1 கப்

வெல்லம் - சிறிய துண்டு

கடுகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கீற்று

புளி - 1 நெல்லிக்காய் அளவு

நல்லெண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சைமிளகாயை கழுவி நீளவாக்கில் கீறிவைக்கவும், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

கடாயில் நல்லெண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, தாளிக்கவும்,

மிதமான தீயில் அடுப்பை வைத்துவிட்டு அதில் பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். அடுத்து வெங்காயத்தையும் சேர்க்கவும்.

புளியை கரைத்து விட்டு அதில் உப்பு, பெருங்காயத்தூள், வெல்லத்தை தூள் செய்து அதில் சேர்த்து கொதிக்க விடவும்.

எல்லாமும் சேர்ந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.

கறி சூடு ஆறியதும் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: