மாவு சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இட்லிமாவு (சிறிது புளித்தது) - ஒரு குழிகரண்டி

சின்ன வெங்காயம் - 10

கடுகு, உளுந்தம்பருப்பு - 1ஸ்பூன்

மிளகாய் வத்தல் - 10

பெருங்காயம் - சிறிது

தேங்காய் - அரை மூடி

எண்ணை - ஒரு குழிகரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சின்னவெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.

தேங்காய்,வத்தலை மிக்ஸியில் நன்கு விழுதாக அரைத்து கொள்ளவேண்டும்.

வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு,கருவேப்பிலை தாளித்து நறுக்கிய் வெங்காயத்தை போட்டு சற்று முறுகலாக வதக்கி அதில் அரைத்த விழுதை சேர்க்க வேண்டும்.

அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர்சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

பின்பு இட்லிமாவில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைத்து அதை கொதிக்கும் விழுதுடன் சேர்த்து உப்பை சேர்த்து தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் கொதிக்கவிட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்துவைக்கவேண்டும்.

குறிப்புகள்:

வத்தல் அதிகம் சேர்த்தால்தான் இந்த சட்னி சுவையாக இருக்கும்.