மல்லிச் சட்னி (1)
0
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி தழை - 4 கட்டு
மிளகாய்வற்றல் - 5
புளி - ஒரு எலுமிச்சை அளவு
உளுத்தம்பருப்பு - 4 தேக்கரண்டி
பெருங்காயம் - பட்டாணி அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பெருங்காயம், உளுத்தம்பருப்பு, மிளகாய்வற்றல் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
புளி, மிளகாய்வற்றல், கொத்தமல்லித்தழை இவற்றுடன் உப்பு சேர்த்து அம்மியிலோ, மிக்ஸியிலோ போட்டு அரைக்கவும்.
பாதி அரைப்பட்டவுடன் உளுத்தம்பருப்பையும், பெருங்காயத்தையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
மையாக அரைப்பட்டவுடன் எடுத்து அதில் கடுகு தாளித்து கொட்டிக் கொள்ளவும்.