பெரிய வெங்காய சட்னி
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 4
பச்சைமிளகாய் - 5
புளி - சிறு எலுமிச்சை அளவு
கடலைமாவு - 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைத்து நீர்க்க கரைத்தெடுத்துக் கொள்ளவும்.
புளித்தண்ணீருடன் கடலை மாவையும் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
பருப்பு சிவந்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் கரைத்து வைத்துள்ள புளி, கடலை மாவுத் தண்ணீரை அதில் ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து கெட்டியானவுடன் இறக்கிவிடவும்.