புதினா கொத்தமல்லி சட்னி (2)
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 5
தக்காளி - 3
புதினா - தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவுளவு
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைக்க:
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
உளுந்தம் பருப்பு - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - காரத்திற்கேற்ப
தேங்காய் - சிறிதளவு
புளி – கொஞ்சம் (புளிப்புக்காக)
கடைசியாக தாளிக்க:
எண்ணெய் – 3 தேக்கரண்டி
கடுகு – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
வெங்காயம் தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புதினா கொத்தமல்லியினை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தபருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து கொண்டு தனியாக வைக்கவும்.
பிறகு அதே கடாயில் வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
பின் தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
நன்றாக வதங்கியவுடன் கடைசியில் புதினா, கொத்தமல்லி சேர்த்து மேலும் ஒரு நிமிடங்கள் வதக்கவும்.
இதனை சிறிது நேரம் ஆற வைத்து கொள்ளவும்.
மிக்சியில் முதலில் வறுத்த பொருட்கள், தேங்காய் புளியினை சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
அரைத்த கலவையுடன் வதக்கி வைத்துள்ள பொருட்கைள தேவையான அளவு உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து அதையும் நன்கு அரைத்து கொள்ளவும்.
தாளிக்கும் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை சட்னியில் கொட்டவும்.
சுவையான சட்னி ரெடி.
குறிப்புகள்:
இது தோசை இட்லிக்கு பொருத்தமாக இருக்கும்.