புதினா கொத்தமல்லி சட்னி
0
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
புதினா - ஒரு கட்டு
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
பூண்டு - 20 பல்
பச்சை மிளகாய் - 8
புளி - சிறு உருண்டை
சீரகம் - 1 தேக்கரண்டி
வெல்லச் சர்க்கரை - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் அதில் சீரகத்தை தாளிக்கவும்.
அதனுடன் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு உப்பு, சர்க்கரை, புளி சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
குறிப்புகள்:
இதனை நீண்ட நாள் வரை வைத்து உபயோகப்படுத்தலாம்.