பீர்க்கங்காய் சட்னி (3)
0
தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் (சிறிய துண்டுகளாக நறுக்கியது) - 2 1/2 கப்
பச்சைமிளகாய் - 6
கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் - 1 கப்
கொத்தமல்லி இலை - 1 கப்
புளி - அரை நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எண்ணெயை சூடாக்கி பச்சைமிளகாய்கள், பீர்க்கங்காயை போட்டு வதக்கவும்.
ஓரளவு நன்கு வதங்கியதும் தேங்காய்த்துருவலையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
தனியாக சிறிது எண்ணெயில் கடலைப்பருப்பையும், உளுத்தம்பருப்பையும் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
அனைத்துப் பொருட்களுடன் கொத்தமல்லி இலை, புளி, தேவையான உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுக்கவும்.
சுவையான சட்னி ரெடி.