பீட்ரூட் சட்னி (2)
0
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
சிவப்பு மிளகாய் - 3
கடலைபருப்பு - 1/4 கப்
பூண்டு - 2 பல்
கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, பூண்டு, சிவப்பு மிளகாய் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின் தனியே பீட்ரூட்டை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். வதக்கியவற்றை சூடு போனதும் மிக்ஸியில் போட்டு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
சுவையான சட்னி ரெடி.
குறிப்புகள்:
இதை மசால் தோசை மாதிரி தோசையில் போட்டும் பரிமாறலாம்.
இட்லிக்கும் சுவையாக இருக்கும்.