பாம்பே சட்னி
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 15
பொட்டுக்கடலை - ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 4
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 6
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சின்ன வெங்காயத்தை தோலுரித்து, இரண்டாக நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்துடன் காய்ந்த மிளகாய், பொட்டுக்கடலை மற்றும் உப்புச் சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, அரைத்த வெங்காயக் கலவையுடன் தண்ணீர் சேர்த்து கலந்து ஊற்றி கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து திக்கானதும் இறக்கவும்.
குறிப்புகள்:
இட்லி, தோசைக்கு பொருத்தமான பாம்பே சட்னி தயார்.
சின்ன வெங்காயத்திற்கு பதிலாக பெரிய வெங்காயமும் உபயோகிக்கலாம். பெரிய வெங்காயம் சேர்த்தால் சுவை சற்று மாறுபடும்.
வெங்காயக் கலவையுடன் தண்ணீர் சேர்க்கும் போது சற்று அதிகமாகவே சேர்க்கவும். அப்போது தான் கொதித்து திக்காகி சரியான பதத்தில் இருக்கும்.