பச்சை சட்னி (1)
0
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி தழை - ஒரு கட்டு
வெங்காயம் - 2
புதினா - அரை கட்டு
பச்சை மிளகாய் - 2
லெமென் ஜூஸ் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
உப்பு - முக்கால் தேக்கரண்டி
செய்முறை:
கொத்தமல்லி, புதினாவை மண் இல்லாமல் ஆய்ந்து அலசி கொள்ளவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து அதில் லெமென் ஜூஸ் கலந்து சாப்பிடவும்.