பச்சை ஆப்பிள் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை ஆப்பிள் - 1

வெங்காயம் - 1

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 2 பல்

மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி

சீரகத்தூள் (வறுத்து பொடிச்செய்துக் கொள்ளவும்) - 1 தேக்கரண்டி

வெந்தயத்தூள் (வறுத்து பொடிச்செய்துக் கொள்ளவும்) - 1/2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

எலுமிச்சைச்சாறு - 1 மேசைக்கரண்டி

சீனி - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஆப்பிளை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும், அதில் எலுமிச்சைச்சாறு விட்டு கலந்து வைக்கவும்.

வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கவும், பூண்டு மற்றும் இஞ்சியை தோல் எடுத்து சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.

ஒரு தவாவில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை லேசாக வதக்கவும்.

பின்னர் இஞ்சி, பூண்டு துண்டுகளை போடவும். அதையும் லேசாக வதக்கிவிட்டு, ஆப்பிளை சேர்த்து ஒரு தடவை கிளறி விடவும்.

ஆப்பிள் முழ்கும் வரை தண்ணீர் விட்டு வேக வைக்கவும். நன்றாக வெந்து கெட்டியாக வரும் போது மத்தால் கட்டி துண்டுகள் இல்லாமால் கடையவும்.

பின்னர் அதில் மிளகாய்தூள், சீனி, உப்பு போட்டு கிண்டவும். வினிகரையும் சேர்த்து கிண்டி, வெந்தயத்தூள், பெருங்காயத்தூள், சீரகத்தூள் கலந்து அடுப்பில் இருந்து இறக்கவும்.

சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்: