பச்சைமிளகாய் கத்தரிக்காய் சட்னி
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 4
பச்சை மிளகாய் - 6
தேங்காய் துருவல் - கால் கப்
புளி - சிறிய உருண்டை
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கத்தரிக்காயை சுத்தமாக கழுவி காம்பை நீக்கி பாதியாக நறுக்கவும்.
வாணலியில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு கத்தரிக்காயை போட்டு வதக்கவும்.
தோலின் நிறம் மாறியவுடன் தனியாக ஒரு தட்டில் வைத்து ஆறவைக்கவும்.
அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், தேங்காய், புளி எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்.
கத்திக்காய் ஆறிய பின் தோலை உரித்துக் கொள்ளவும். பின் எல்லாவற்றையும் சேர்த்து உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.