தேங்காய் தக்காளி சட்னி
0
தேவையான பொருட்கள்:
பெரிய தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
புளி - அரை நெல்லிக்காய் அளவு
தேங்காய்த்துருவல் - ஒரு கைப்பிடி
பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி
வற்றல் மிளகாய் - 3
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சில இலைகள்
நல்லெண்ணெய் - தாளிக்கவும் வதக்கவும் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிறிது எண்ணெயில் முதலில் பொட்டுக்கடலை, மிளகாயைப் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காயம், தக்காளியை வதக்கி, கடைசியில் தேங்காய்த்துருவலைப் போட்டு ஒரு கிளறு கிளறியெடுக்கவும்.
புளி, பொட்டுக்கடலை, மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.