தேங்காய் சட்னி (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - 3/4 கப்

பச்சை மிளகாய் - 2

பூண்டு - அரை பல்

சின்ன வெங்காயம் - 2

பொட்டுக்கடலை - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

சட்னிக்கு பொட்டுக்கடலை தவிர மீதமுள்ள பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் இட்டு தண்ணீர் ஊற்றி கடைசியாக பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து எடுக்கவும்.

தாளிப்புக்கு கொடுத்தவற்றை தாளித்து சட்னியில் கொட்டவும்.

சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்:

இட்லி, தோசை, ஆப்பத்துக்கு நல்ல பொருத்தம்.