துவரம்பருப்பு சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு - ஒரு கைப்பிடி

கறிவேப்பிலை - 10 இதழ்

வரமிளகாய் - 3

பூண்டு - 5 பல்

பெரிய வெங்காயம் - பாதி

புளி - அரை இன்ச்

எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி துவரம்பருப்பை போட்டு நன்கு சிவக்க வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.

அதே கடாயில் மீண்டும் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை மற்றும் வரமிளகாயை போட்டு வறுக்கவும்.

பின்னர் மிக்ஸியில் வறுத்த துவரம்பருப்பு, வறுத்த கறிவேப்பிலை, வரமிளகாய், பூண்டு மற்றும் பச்சை வெங்காயத்தை போட்டு சிறிது தண்ணீர் தெளித்து புளி வைத்து கொரகொரப்பாக அரைக்கவும்.

எளிதாக செய்யக் கூடிய, குறைந்த பொருட்களை கொண்டு சமைக்கக் கூடிய சட்னி ரெடி.

குறிப்புகள்:

சுடு சாதத்திற்கு எனில் கொரகொரப்பாக அரைத்து, சட்னியில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

இட்லி, தோசைக்கு எனில் தண்ணீர் கொஞ்சம் அதிகமாக சேர்த்து, கொஞ்சம் நைசாக அரைக்கவும்.