தயிர் சட்னி (1)
0
தேவையான பொருட்கள்:
தயிர் - 1 கப்
தேங்காய் அரைத்த விழுது - 3 தேக்கரண்டி
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 2
பச்சைமிளகாய் கீறியது - 2
மல்லி இலை பொடியாக நறுக்கியது - 3 தேக்கரண்டி
புதினா பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி
தக்காளி பொடியாக நறுக்கியது - 4 தேக்கரண்டி
உப்பு - 3/4 தேக்கரண்டி
செய்முறை:
தயிர் தேங்காய் விழுதை தவிர மற்றவற்றை பாத்திரத்தில் போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
பிறகு தயிர் தேங்காய் விழுது சேர்த்து சாப்பிடும் சமயம் உப்பு சேர்க்கவும். இல்லையென்றால் தண்ணீர் விடும்.
பிரியாணிக்கேற்ற தயிர் சட்னி தயார்.