தயிர் சட்னி
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தேங்காய்த்துருவல் - 1 கப்
பொட்டுக்கடலை - 1/2 கப்
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 1 பல்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1/2 கப்
தாளிக்க:
கடுகு
உளுத்தம் பருப்பு
மிளகாய் வற்றல்
கறிவேப்பிலை
நீளமாக நறுக்கிய வெங்காயம்
எண்ணெய்
செய்முறை:
பொட்டுக்கடலை, மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை நீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும். தேங்காய்த்துருவலையும் நீர் சேர்க்காமல் அரைத்து பின்னர் சிறிது நீர் சேர்த்து அரைத்தால் சீக்கிரமாக, நைஸாக அரையும்.
சட்னி பதத்திற்கு அரைத்து எடுத்து, தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
தாளிக்கும் பொருட்களை எண்ணெயில் தாளித்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இட்லி, தோசை வடையுடன் பரிமாறவும்.