தக்காளி ஜீரக சட்னி
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
முழு உளுந்து - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2 அல்லது 3
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 4
புளி (மிளகு அளவு) - 2
தேங்காய் பூ - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க வேண்டியவை:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
முழு உளுந்து - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இனுக்கு
பெருங்காயம் - 1 பின்ச்
செய்முறை:
எண்ணெய் காய்ந்ததும் கடலைப்பருப்பு, உளுந்து, 1/4 தேக்கரண்டி சீரகம் போட்டு சிவக்க வறுக்கவும்.
சிவப்பு மிளகாய் போட்டு வதக்கவும்.
சின்ன வெங்காயம் (அரிந்தது) போட்டு வதக்கவும்
தக்காளி (பொடியாக அரிந்தது) போட்டு தண்ணீர் சுண்ட வதக்கவும்
பின்பு தேங்காய் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வதக்கவும்
ஆறியதும் சீரகம் 3/4 தேக்கரண்டி, உப்பு சேர்த்து அரைக்கவும்
எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிக்க விடவும்,முழு உளுந்து சேர்த்து சிவக்க வறுக்கவும்
கறிவேப்பிலை,பெருங்காயம் சேர்க்கவும். தாளித்ததை அரைத்த கலவையுடன் சேர்க்கவும்.
சுவையான சட்னி ரெடி.