தக்காளி சட்னி (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிந்த தக்காளி - 3 கப்

பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் - 1 கப்

கீறிய பச்சை மிளகாய் - 2

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

பொடியாக அரிந்த கொத்தமல்லி இலை - 1/4 கப்

பூண்டு இதழ்கள் [சிறியது] - 10

சோம்பு - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

தேங்காய்த்துருவல் - 1/2 கப்

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகைப் போடவும்.

அது பொரிந்ததும் உளுத்தம்பருப்பைப் போட்டு அது இலேசாகசிவந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

பூண்டையும் சோம்பையும் நசுக்கிச் சேர்த்து இலேசாக வதக்கவும். தக்காளியை தோல் நீக்கி அரைத்து சாறு எடுத்து மஞ்சள் தூளுடன் மிளகாய்த்தூளும் சேர்த்து கொதிக்க விடவும்.

எண்ணெய் தெளிந்து தக்காளி கெட்டியானதும் தேங்காயை கெட்டியாக மசிய அரைத்து சேர்க்கவும்.

குழம்பாய் கொதித்து வரும்போது கொத்தமல்லியைக் கலந்து இறக்கவும்.

சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்: