தக்காளி சட்னி (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - 3

வெங்காயம் - 1

வறமிளகாய் - 2

கடலை, உளுத்தம் பருப்பு - 1 மேசைகரண்டி

கடுகு - சிறிது

எண்ணை - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் தக்காளி, வெங்காயம், மற்றும் மிளகாயை ஒன்றுக்கு இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணை ஊற்றி கடுகு, கடலை மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.

பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியது தக்காளியை போட்டு வதக்கி இறக்கவும்.

ஆறியது மிக்ஸியில் உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும்.

சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்: