தக்காளி சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - 4

சின்ன வெங்காயம் - 200 கிராம்

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

வரமிளகாய் - 2

கறிவேப்பிலை - ஒரு இணுக்கு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்

கடுகு

சின்ன வெங்காயம் - 4

கறிவேப்பிலை - ஒரு இணுக்கு

செய்முறை:

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை நன்றாக வதக்கியெடுத்து ஆறவைக்கவும்.

அதே வாணலியில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய 4 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். (வதக்கிய தக்காளி துண்டுகளில் இரண்டினைத் தனியாக எடுத்து ஆறவைக்கவும்).

ஆறவைத்த வெங்காயக் கலவையுடன் புளி மற்றும் எடுத்து வைத்துள்ள தக்காளி துண்டுகளிரண்டையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கலவையை வதக்கிய தக்காளியுடன் சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு போட்டு நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும்.

மிகவும் சுவையான தக்காளி சட்னி ரெடி

குறிப்புகள்:

இட்லி, தோசைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.