தக்காளிச் சட்னி

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 1 மூடி

தக்காளிப்பழம் - 4

பச்சைமிளகாய் - 4

பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி

மஞ்சள்பொடி - 1/4 தேக்கரண்டி

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

பெரிய வெங்காயம் - 1

கடுகு - ஒரு தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை:

தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

துருவிய தேங்காயுடன் நறுக்கிய தக்காளி, பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், மஞ்சள்பொடி, உப்பு முதலியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

மிகவும் நைசாக அரைத்துவிடாமல் சற்று கரகரப்பாக இருக்குமாறு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை கொஞ்சம் நீர்க்க கரைத்து வாணலியில் ஊற்றி ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு பிறகு இறக்கிவிடவும்.

குறிப்புகள்: