தக்காளிச்சாறு (இட்லிக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - 2 (மிக்ஸியில் அடித்தது)

தண்ணீர் - 2 கப்

கடுகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - தேவைக்கு

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 1 (கீறியது)

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.

இதில் அரைத்த தக்காளி, தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி வாசம் போகும்வரை நன்றாக கொதிக்க விடவும்.

சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்: