சின்ன வெங்காய சட்னி
0
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 20 என்னம்
சிவப்பு வத்தல் - 8 என்னம்
தக்காளி - 2 என்னம்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இனுக்கு
நல்லெண்ணைய் - 1 1/2 தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயம்,தக்காளி,மிளகாய் எல்லாம் சேர்த்து நைசாக இல்லாமல் அதற்கு முந்தய பக்குவத்தில் அரைத்தெடுக்கவும்.
பின் எண்ணைய் 2 ஸ்பூன் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த கலவையை கொட்டி உப்பு சேர்த்து கலக்கவும்.
பின் கொதித்ததும் நல்லெண்ணைய் ஊற்றி 4 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கி பறிமாறவும்.
சின்ன வெங்காய சட்னி ரெடி.