கொள்ளு சட்னி (1)
0
தேவையான பொருட்கள்:
வேக வைத்த கொள்ளு - 1 கப்
வெங்காயம் - 3
வரமிளகாய் - 3
சீரகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - சிறிது
நல்லெண்ணெய் - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், வரமிளகாய், சீரகம் போட்டு வதக்கி ஆற வைக்கவும்.
மிக்ஸியில் வேக வைத்த கொள்ளு, வதக்கி ஆற வைத்த பொருள்கள் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும். பின் பச்சையாக ஒரு வெங்காயத்தை அதனுடன் சேர்த்து அரைக்கவும்.
கடாயில் கடுகு, கறிவேப்பிலையை நல்லெண்ணெயில் தாளித்து அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.
சுவையான சட்னி ரெடி.