கொத்தமல்லி சட்னி (6)
0
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி - 2 கட்டு
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு அங்குலம் அளவு
பூண்டு - 6 பல்
புளி - பாதி எலுமிச்சையளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
எண்ணெயில் மசித்த இஞ்சி, பூண்டை வறுக்கவும். பிறகு பச்சை மிளகாய், வெங்காயம், மற்றும் கொத்தமல்லியை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
கொஞ்சம் தண்ணீர் ஊற்றி புளி சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு அனைத்தையும் மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
சுவையான சட்னி ரெடி.