கொத்தமல்லி சட்னி (4)
0
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி - 2 கட்டு
மிளகாய் - 4
தனியா - ஒரு தேக்கரண்டி
புளி - பாதி எழுமிச்சையளவு
பூண்டு - 6 பல்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
எண்ணெயில் மிளகாய், பூண்டு மற்றும் தனியாவை வறுத்து, எடுத்து கொள்ளவும்.
எண்ணெயில் கொத்தமல்லியை போட்டு வறுத்து கொள்ளவும்.
மிக்சியில் முதலில் மிளகாய், தனியா மற்றும் புளியை அரைத்துக் கொண்டு, பின்னர் கொத்தமல்லி, உப்பு போட்டு அரைத்து கொள்ளவும்.
சுவையான சட்னி ரெடி.