கொத்தமல்லி சட்னி (3)
0
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி இலை - ஒரு சிறிய கட்டு
கருவேப்பிலை - சிறிது
வத்தல் - 5
தக்காளி - 2 சுமாரானது
புளி - நெல்லிக்காய் அளவு
கடுகு - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வத்தல்,கருவேப்பிலை,கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
பின் இத்துடன் தக்காளி, உப்பு,புளி இவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து அரைத்த கலவையில் கொட்டி கிளறவும்.
சுவையான சட்னி ரெடி.