கேரட் சட்னி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கேரட் - 1

பெரிய வெங்காயம் - 1

பூண்டு - 2 பல்

தேங்காய் - அரை மூடி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கடலை பருப்பு - 2 தேக்கரண்டி

வரமிளகாய் - 5

சீரகம், சோம்பு, மிளகு, கொத்தமல்லி விதை - சிறிதளவு

கறிவேப்பிலை - 1 கொத்து.

புளி - சிறிய துண்டு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கேரட்டை நன்கு கழுவி தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக அரிந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வரமிளகாய், சீரகம், சோம்பு, மிளகு, பூண்டு, கொத்தமல்லிவிதை, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு துருவிய காரட் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். (தேவையெனில் காய் எளிதில் வேக சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்.)

காய் வெந்தபின் தேங்காய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பின்னர் வாணலியில் இருந்து எடுத்து ஆறவைத்து, உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்.

குறிப்புகள்:

இதே முறையில் கேரட்டிற்கு பதிலாக பீட்ரூட், முள்ளங்கி, வாழைத்தண்டு அல்லது கத்தரிக்காய் சேர்த்து சட்னி தயாரிக்கலாம்.

முள்ளங்கி, வாழைத்தண்டு, கத்தரிக்காய் சட்னி தயாரிக்கும் போது அவற்றை தனியே வதக்கிக் கொள்ளவும்.