கேரட் சட்னி
தேவையான பொருட்கள்:
கேரட் - 3
மிளகாய் வற்றல் - 3
உளுத்தம் பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாய் வற்றலை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.
கேரட்டை தோல் சீவி வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். பின் நறுக்கிய கேரட் துண்டுகளை போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும். பின்னர் தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
எல்லாம் நன்கு ஆறிய பின் தேங்காய் துருவல், மிளகாய்வற்றல், வதக்கிய கேரட், உப்பு, புளி, சிறிது தண்ணீர் விட்டு மிக்சியில் போட்டு அரைக்கவும்.
பின் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சட்னியில் கலக்கவும்.
குறிப்புகள்:
கேரட் சட்னி சாதத்தில் போட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.