குடைமிளகாய் சட்னி (2)
தேவையான பொருட்கள்:
குடைமிளகாய் - 2 பெரியதாக
தக்காளி - 2
சர்க்கரை - 1/2 கோப்பை
வினிகர் - 1/2 கோப்பை
மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பற்கள்
எலுமிச்சைச்சாறு - இரண்டு பழத்திலிருந்து
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 1/2 கோப்பை
உப்புத்தூள் - தேவையான அளவு
செய்முறை:
குடமிளகாயை கழுவி நன்கு துடைத்து விட்டு அதனுள்ளிருக்கும் சதைப்பகுதியை அகற்றி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய்,கடுகு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
எலுமிச்சை பழத்திலிருந்து சாற்றை பிழிந்து எடுத்து அதில் மிளகாய்த்தூளையும், உப்பையும் போட்டு கலக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி நன்கு காயவைக்கவும். அதில் அரைத்த விழுது, மற்றும் தக்காளியைப் போட்டு வதக்கவும்.
பிறகு குடமிளகாயைப் போட்டு சிறிது வதக்கி சர்க்கரை, வினீகர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி நன்கு கலக்கவும்.
அடுப்பை மிதமாக எரியவிட்டு அடிக்கடி கிளறி விடவும்.
கலவை நன்கு வெந்து சட்னி பதம் வந்தவுடன் இறக்கி வைத்து ஆறவிடவும்.
குறிப்புகள்:
இந்த சட்னியை செய்து இரண்டு அல்லது மூன்று நாள் கழித்து சாப்பிட்டால் சுவை அதிகமாக ஊறி இருக்கும்.