கிரீன் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மல்லி தழை - 1 கப்

புதினா இலை - 1 கப்

கறிவேப்பிலை - 1 கப்

தேங்காய் - 1/2 கப்

பெரிய வெங்காயம் - 1

புளி - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் - சிறிதளவு

கடுகு - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை:

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு பொரிய விடவும்.

பின்னர் அரிந்த பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், புளி போட்டு வதக்கவும்.

அதன் பின் தேங்காய் சேர்த்து வதக்கவும்.

சிறிது வதங்கிய பின் நன்கு கழுவிய மல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகளை போட்டு, சிறிது உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

ஆறிய பின் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்து சட்னியில் ஊற்றி, நன்கு கிளறி பரிமாறவும்.

குறிப்புகள்: