காலிஃபிளவர் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காலிஃபிளவர் - 1/2 கிலோ

தேங்காய் - 1/2 மூடி

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

சோம்பு - 1 தேக்கரண்டி

ஏலக்காய் - 1

மிளகாய் வற்றல் - 6

பூண்டு - 5 பல்

கசகசா - 1 மேசைக்கரண்டி

கிராம்பு - 1

பட்டை - ஒரு சிறியத் துண்டு

சிறிய வெங்காயம் - 20

தக்காளி - 1

முந்திரிப்பருப்பு - 10

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.

காலிஃபிளவரைக் கழுவிச் சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, சோம்பு, கிராம்பு, பச்சைமிளகாய், கசகசா, தேங்காய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாய் அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கிக் கொள்ளவும்.

பிறகு அதனுடன் காலிஃபிளவரையும், அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்புச் சேர்த்து கிளறி கொதிக்கவிடவும்.

நன்றாக கொதி வந்தவுடன் இறக்கவும்.

குறிப்புகள்:

தேவையெனில் சிறிது தேங்காய் பாலினையும் இறக்குவதற்கு முன்பு ஊற்றலாம்.